follow the truth

follow the truth

May, 9, 2025
Homeவிளையாட்டுப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

Published on

இந்தியன் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது, இதில் வெற்றி பெறும் அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

நாளை மறுநாள், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த, வெற்றி பெறும் அணி, இறுதிச் சுற்றின் முதல் போட்டியில் தோல்வி அடையும் அணியுடன் மோத வேண்டும். அப்போது வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.

எனினும் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைசஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.

பதில் இன்னிங்சை விளையாடிய மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...