குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

316

ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை அணியை 62 ஓட்டங்களால் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் சுப்மன் கில் 129 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 234 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மோஹிட் சர்மா 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து குஜராத் அணி வரும் ஞாயிற்றுக் கிழமை (28) ஆம் திகதி சென்னை அணியை இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது.

இதேவேளை சுப்மன் கில் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.ல் தொடரில் 800 ஓட்டங்களை கடந்துள்ள நிலையில் தனது 3ஆம் சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, முதலாவது பிளேஓப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here