follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1உரம் பெறுவதில் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி செயல்படலாம்

உரம் பெறுவதில் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி செயல்படலாம்

Published on

இம்முறை நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சரில் எந்தவொரு குறித்ததொரு உர வகை என அரசாங்கம் மட்டப்படுத்தப்படவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய நாட்களில் 30 வீத சேதன உரங்களும் 70 வீத இரசாயன உரங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இரண்டு மாவட்டங்களில் உள்ள சில சிறு விவசாயிகள் குழு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் குறிப்பிட்ட சில வகையான உரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அது உண்மையல்ல என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 70 சதவீத இரசாயன உரங்களும், 30 சதவீத கரிம உரங்களும் இதற்கு பரிந்துரைக்கப்படவில்லை.

அதன்படி, உரம் பெறுவதில் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி செயல்படலாம்.

இந்த வவுச்சர்களை வழங்குவதன் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை அரச துறை விவசாய சேவை நிலையங்களிலோ அல்லது தனியார் துறையிலோ கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...