இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
போட்டியில் 56 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று இலக்கைக் கடந்தது.