follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1'வாக்னர்' தலைமையின் இறப்பு குறித்து புடின் இரங்கல்

‘வாக்னர்’ தலைமையின் இறப்பு குறித்து புடின் இரங்கல்

Published on

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், ‘வாக்னர்’ கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் ‘வாக்னர்’ படைப்பிரிவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரைக் கொன்ற விமான விபத்து குறித்து கருத்து தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றிய புடின், எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் வாக்னரின் பிற உறுப்பினர்கள் இறந்தது பரிதாபம் எனத் தெரிவித்திருந்தார்.

எவ்ஜெனி பிரிகோசின் மோசமான முடிவுகளை எடுத்ததாகவும் புடின் விளக்கினார். விமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலை தெரிவிக்க ரஷ்யா ஜனாதிபதி புடினும் மறக்கவில்லை.

எவ்ஜெனி பிரிகோசின், ஒரு காலத்தில் புடினின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். சில மாதங்களுக்கு முன், புடினுக்கும், ரஷ்ய அரசுக்கும், இராணுவத்துக்கும் சவாலாக மாறினார். இது ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதி.

விமான விபத்துக்கு புடின் தான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூட புடின் எவ்ஜெனி பிரிகோசின் கொன்றதாக ஊகிக்கிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...