பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.
குறித்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று(10) இடம்பெற்றது.
இச் சந்திப்பின்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் வேண்டிக்கொண்டார்.
மேலும் இச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.