“நான்கு வருடங்களாக நான் வதைக்கப்பட்டேன்” – மைத்திரி

933

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக தாம் குற்றஞ்சாட்டப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் சேனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்றார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன,

“சேனல் 4 பற்றிய அந்தக் கடிதத்தின் வேலைகள் இன்று நிறைவடையும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறோம். பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக எனக்கு அனைத்து இன்னல்களையும் கொடுத்தார்கள். இப்போது நீங்கள் சேனல் 4 ஐப் பார்க்கும்போது, ​​எல்லாமே வித்தியாசமாக தெரிவுதை நீங்களே பார்க்கலாம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here