திருமணமான தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு உரிய விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினரின் விவாகரத்தை அங்கீகரிக்க திருமணப் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடுமாறு ஒருவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் மீண்டும் இலங்கையில் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டும் என்ற தற்போதைய சட்டம் இந்த தீர்ப்பின் மூலம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.