மோசமான காலநிலை காரணமாக பதுளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று ஹாலிஎல்ல உடுவர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய மற்றும் பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடம்பிட்டிய மாலிகதென்ன ஊடாக பண்டாரவளை வீதியை அந்த வீதியில் பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு மாற்று வீதியாக பயன்படுத்த முடியும்.
நாளை முதல் 99 கொழும்பு – பதுளை பிரதான பாதையை பயன்படுத்தும் பயணிகள் போக்குவரத்து பஸ்களும் இந்த மாற்று பாதையில் இயங்கும்.