மதஸ்தலங்களை பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், தரவு சேகரிப்பு தற்போது இடம்பெற்று வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சேகரிக்கப்படும் தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.