ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றார்.
விமான நிலையத்தின் தற்போதைய சூழலையும், அதன் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட அவர், விமான நிலையம் இழப்பை எதிர்கொண்டும், ஊழியர்களின் பிரச்சினைகள் முறைப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
வளர்ச்சி நடவடிக்கைகளில் வெளி தரப்பினரின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும், அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மத்தல விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பயணிகளுக்கான சுமையை குறைக்கவும், பயணத்துக்கு முன் வசூலிக்கப்படும் Embarkation Tax முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம், மத்தல சர்வதேச விமான நிலையம் உலகில் பயணிகளுக்கு மிகவும் செலவைக் குறைக்கும் விமான நிலையமாக மாறியுள்ளது என்றும், இத்தகைய வரிவிலக்கு ஏற்பாடுகள் வேறு எந்த விமான நிலையத்திலும் காணப்படுவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.