கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை இஷ்டத்துக்கு உயர்ந்து வருகிறது
ஒரு கிலோ கோழிக்கறியின் விலையை இன்று (12) முதல் உயர்த்த கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 30 – 50 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் நேற்று (11) பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை புதிய விலைகளின் கீழ் இன்று (12) முதல் 1250 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப முட்டை வரத்து இல்லாததால் முட்டை விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விலை கிறிஸ்மஸ் காலத்தில் மேலும் அதிகரிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.