கந்தகாடு கைதிகள் தப்பியோடியது வன்கொடுமையாலா?

219

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தப்பியோடிய 136 கைதிகளில் இதுவரை 129 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய கைதிகளில் 34 பேரை நேற்று பிற்பகல் வரையிலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களை சோமாவதி சரணாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடும் நடவடிக்கையை இராணுவம் மற்றும் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று பிற்பகல், கைது செய்யப்பட்டவர்களில் 24 பேர் புலஸ்திபுரவிலும், 19 பேர் பொலன்னறுவையிலும், 34 பேர் ஹிங்குராக்கொடையிலும், 25 பேர் மீகஸ்வெவ பொலிஸ் நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க கட்டப்பட்ட கந்தகாடு முகாமில் 485 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here