கந்தகாடு குற்றச்சாட்டுகளை ஆணையாளர் நாயகம் மறுக்கிறார்

179

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை எனவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியகத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புனர்வாழ்வுக் காலத்தில் தாதியர்களுக்கு முதலுதவி, அனர்த்த முகாமைத்துவம், உயிர் பாதுகாப்பு, அவசரகால தீயை எதிர்கொள்வது போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வகையில் இரத்தினக்கல் வெட்டுதல், பேக்ஹோ இயந்திரங்களை இயக்குதல் போன்ற பாடநெறிகள் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here