ரசிகர்களின் இதயங்களில் மறக்க முடியாத பெயரைப் பெற்ற பிரபல பாடகர் சாமர வீரசிங்க, சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் செய்தியால் அவரை நேசிக்கும் பலரும் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல்நிலை குறித்து பரிசோதிக்க வரவேண்டாம் என மருத்துவமனை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.