follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்

பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்

Published on

தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் பிரபல கோலிவுட் நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (28) காலை காலமானார்.தமிழ் சினிமாவில் கேப்டன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேமுதிக., கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பொதுவெளியில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

மூச்சு திணறல் காரணமாக, இம்மாதம் துவக்கத்தில் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சில நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தெரிவித்திருந்தது.

ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட உள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...