வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல் தொடர்பில் 34 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று(04) சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.