இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சனுக்கு (Gus Atkinson) பதிலாக துஷ்மந்த சமீர கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் 50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு துஷ்மந்த சமீர ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் முன்பு ஐபிஎல்’லை மூன்று முறை பிரதிநிதித்துவப்படுத்தினார், முறையே 2018 மற்றும் 2021 சீசன்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.
2022 போட்டியில், அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் அந்த போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.