புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில் இந்த வாக்கெடுப்பு மிகுந்த ரகசியத்துடன் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது
வெற்றி பெறும் ஒருவரை தீர்மானிக்கும் வரை, தங்கள் விருப்பமான வேட்பாளருக்கு கார்டினல்கள் தொடர்ந்து வாக்கு பதிவு செய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அந்த தேவாலயத்தில் அமைந்துள்ள புகைக்குழலிலிருந்து வெள்ளை புகை வெளியேறும்.
இந்த நிகழ்வு பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகத்திற்கு தெரிவிக்கும் முக்கிய அறிகுறியாகும்.