மாலைத்தீவை சென்றடைந்தது சீனாவின் உளவு கப்பல்

193

இந்தியா மற்றும் மாலைத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலைத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா.

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலைத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலைத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. மாலைத்தீவுடனான சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

இதற்கிடையே, சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து மாலைத்தீவு நோக்கி சென்றது.

பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் இன்று மாலைத்தீவு வந்தடைந்துள்ளது. ஆராய்ச்சிக்காக மட்டுமே கப்பல் சென்றுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி கப்பல் என்ற பெயருடன் மாலைத்தீவு வந்துள்ள இந்த கப்பல் 4,300 டன் எடை உடையது. இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கை பேரிடருக்கான சாத்தியக் கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here