நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

145

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்று, பிற்பகல் 4.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை சபாநாயகர் புறக்கணித்தாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அத்துடன், ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி ஐக்கிய மக்கள் சக்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்ததுடன், அதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

முன்னதாக குறித்த பிரேரணையை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது மூன்று நாட்களாக நீடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here