வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் தினசரி மூன்று பேர் உயிரிழப்பதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்வேறு பெயர்களில் விற்கப்படும் வெற்றிலை, புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது.
வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும் நியுமோனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாளாந்தம் வாய் புற்றுநோயாளிகள் ஆறு பேர் வரையில் பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3 பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது.