ஆபாச காணொளி, நிர்வாணப் படங்கள் தொடர்பான முறைப்பாட்டுக்கு புதிய முறைமை

298

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள “internet watch foundation”க்கு தெரிவிக்கப்படுகின்றன.

அதன் பின்னர் அந்த நிறுவனம் ஊடாக குறித்த ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், முறைப்பாடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதை கண்டறிந்து, சர்வதேச பொலிஸ் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here