இன்று பெரிய வெள்ளி

121

இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியானதை நினைவுகூரும் புனித வெள்ளியை இன்று (29) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

அதன்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் இறந்ததை இன்று நினைவுகூருவதுடன், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் தினம், அதாவது ஈஸ்டர் ஞாயிறு வரும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here