ஏப்ரலில் உள்ளுர் முட்டை விலை 35 ரூபா?

376

ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாளாந்த உள்நாட்டு கோழி முட்டை உற்பத்தி மொத்த நாளாந்த தேவையை விட அதிகமாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூர் கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி ஏற்கனவே 75 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு கூறுகிறது.

தற்போது சந்தையில் கோழி முட்டையின் விலை 45-50 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here