follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2புத்தாண்டுக்காக $470.6 மில்லியனுக்கு ஆடைகள் இறக்குமதி

புத்தாண்டுக்காக $470.6 மில்லியனுக்கு ஆடைகள் இறக்குமதி

Published on

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவை இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சிங்கள புத்தாண்டு காரணமாக, துணி இறக்குமதி அதிகரித்திருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...