follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்

Published on

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளில் தரம் 9-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் E.A.D.S.சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் 13 கைத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடாக இந்த தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மின்சார மோட்டார் சைக்கிள் பராமரிப்பு, ஹோட்டல்கள், அழகுக்கலை மற்றும் கட்டட ஓவியம் போன்ற திட்டங்கள் இதில் அடங்குகின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...