தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது

94

தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்பு படுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் பாராளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைப்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்த போது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இலலை இல்லை என அவர் தெரிவித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சந்தித்த போது அவரும் இதையே தெரிவித்தார். ஆகவே இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here