இராணுவத்தினருக்கு இன்று முதல் பொது மன்னிப்பு காலம்

155

நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ அடையாள அட்டையின் நகல், தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் புகைப்பட நகல் இங்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here