பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா…?

106

பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா…? என்றால் பொதுவாக மருத்துவ கூட்டமைப்புகள் பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. ஆனாலும் பாமாயில் உடலுக்கு நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. அது குறித்த பதிவு உங்களுக்காக….

பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் பாமாயில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாமாயில் பற்றிய தவறான கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது. ஆனால் இதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பது என்பது யாருக்கும் தெரியாது.

உண்மையில் பாமாயில் உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்க கூடியது அல்ல. பாமாயில் என்பது ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான். இந்த தாவரம் இந்தோனிசியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் விளைகிறது. மலேசியாவில் இருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெயை வாங்கி இங்குள்ளவர்கள் சமயலுக்கு பயன்படுத்தும் தரத்திற்கு மாற்றி விடுகிறார்கள்.

சுத்தமான பாமாயில் சிகப்பு நிறத்தில் இருக்கும். 15 கிலோ பழத்தில் இருந்து 20 முதல் 25 சதவிகிதம் பாமாயில் கிடைக்கும். வெறும் 100 கிராம் பாமாயில் எண்ணையில் 884 கலோரிகள் உள்ளதாக மதிப்பிட்டுகிறார்கள். இதில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக வேறு எந்த பழத்திலும் கிடைக்காத அளவு விட்டமின் ஈ இந்த பழத்தில் உள்ளது. ஒரு ஸ்பூன் பாமாயிலில் 120 கலோரிகள் வரை இருக்கின்றன.

கொழுப்பு – 14 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு – 7 கிராம்
மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு – 5 கிராம்
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு – 1 கிராம்
வைட்டமின் ஈ – தினசரி தேவையில் 14 சதவீதம்

பாமாயில் இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் (HDL) கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்து இதய நோய் ஆபத்துகள் வராமல் தடுக்க உதவி செய்கிறது.

கண் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து தெளிவான பார்வையை இது உண்டாக்குகிறது. இதில் இயற்கையாகவே விட்டமின் E நிரம்பி உள்ளதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை இது தடுக்கிறது.

மற்றொரு புறம் இதில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும், அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இந்த பாமாயில் தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here