உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக ‘ஈஸ்டர் தாக்குதல் ஏப்ரல் 2019 – பாதிக்கப்பட்ட நிதி’ என்ற பெயரில் நிறுவப்பட்ட நிதிக்கு மேலும் 28 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 22ஆம் திகதி 15 மில்லியன் ரூபாவாகவும், 30ஆம் திகதி 13 மில்லியன் ரூபாவாகவும் இந்த தொகையை வரவு வைத்துள்ளார்.
இதன்படி, இதுவரை செலுத்தப்பட வேண்டிய 10 மில்லியன் ரூபாவில் 43 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.
இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டதன் மூலம், ஏப்ரல் 30ஆம் திகதி வரை, 64,825,588.87 ரூபாய் இந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் உயிர்த்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவிருந்த 10 மில்லியன் ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது
மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 1,725,588.87 ரூபாவையும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன இதுவரை 4.1 மில்லியன் ரூபாவையும் செலுத்தியுள்ளார்.
மேலும், அரசு சார்பில் செலுத்த வேண்டிய ரூ.1 மில்லியன் தொகையும் திறைசேரி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.