follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉலகம்மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

Published on

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள புறநகர்ப்பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றின் போது, பிரசார மேடை சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் Jorge Álvarez Máynez-இன் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையே சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தனக்கு காயம் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் J X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கருணை கொலைக்கு பிரித்தானிய பாராளுமன்றம் ஒப்புதல்

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டனில்...

இந்தியா – பாகிஸ்தான் போரை தீர்த்த டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான்...

அகமதாபாத் விபத்து – ஏர் இந்தியா முன்பதிவுகளில் வீழ்ச்சி

அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில்...