follow the truth

follow the truth

July, 27, 2024
Homeலைஃப்ஸ்டைல்யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம், யாரெல்லாம் செய்யக்கூடாது

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம், யாரெல்லாம் செய்யக்கூடாது

Published on

இரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் இரத்தத்தை தானம் செய்யலாம் அல்லது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற இரத்த கூறுகளை மட்டும் தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்யும்போது அதில் உள்ள எந்திரமானது இரத்தத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து அவற்றை உடலுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு இரத்த நன்கொடையை செய்யும்போதும் அதை எவ்வளவு பாதுக்காப்பாக செய்ய முடியும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறையும் நீங்கள் முழுமையாக இரத்த தானம் செய்ய முடியும். எனவே ஒரு ஆண்டிற்கு சுமாராக 6 முறை இரத்த தானம் செய்ய முடியும் என நியூயார்க் இரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான புரூஸ் சாச்சிஸ் கூறுகிறார். அதே போல நீங்கள் இரத்த பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம்.

யாரெல்லாம் இரத்த தானம் செய்ய கூடாது?

இரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமான உடல் நிலையை கொண்டிருக்கும் பட்சத்தில் 16 முதல் 17 வயதுடையவர்கள் பெற்றோர் அல்லது பாதுக்காவலரின் ஒப்புதலுடன் நன்கொடை அளிக்கலாம். ஆனால் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவரிடம் கடிதம் பெற்ற பிறகே இரத்த தானம் செய்ய முடியும்.

அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 38 சதவீதம் மக்கள் இரத்த தானம் செய்யும் தகுதியை பெற்றுள்ளனர். சில தற்காலிகமான காரணங்கள் கூட இரத்த தானம் செய்வதை தடுக்கின்றன.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கர்ப்ப காலங்களில் லேசான ரத்த சோகை ஏற்படுவதாலும் அவர்கள் இரத்த தானம் செய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, எனவே அவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது. அவர்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகே இரத்த தானம் செய்யும் தகுதியை பெறுகின்றனர்.

மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்
சில மருந்துகளை உட்கொள்பவர்கள் தற்காலிகமாக இரத்த தானம் செய்யும் தகுதியை இழக்கின்றனர். அவர்களை எடுத்துக்கொள்ளும் மருந்தை பொறுத்து காலம் மாறுப்படும். எடுத்துக்காட்டாக கூமாடின் அல்லது வார்ஃபிலோன் போன்ற மருத்துகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்தை நிறுத்திய ஏழு நாட்களுக்கு பிறகே நீங்கள் ரத்த தானம் செய்ய முடியும்.

ஆனால் தடிப்பு தோல் அழற்சிக்கான வாய்வழி ரெட்டினாய்டு சிகிச்சையான சோரியாடேன் செய்தவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்தே இரத்த தானம் செய்ய முடியும்.

LATEST NEWS

MORE ARTICLES

டீ குடிக்காவிட்டால் தலைவலி வருமா?

இந்தியா, இலங்கையிலும் கூட அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள். இதைப்போல...

சானிட்டரி நாப்கின்கள் கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானதாம்..

சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ இரசாயனங்கள் இதில் இருக்கிறது சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை...

இவருக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி

மனித உடலின் மேல் சில மணி நேரமாவது சூரிய ஒளி படவேண்டும். அப்பொழுது தான் உடலுக்கு தேவையான விட்டமின்...