follow the truth

follow the truth

May, 9, 2025
Homeலைஃப்ஸ்டைல்ஆண்களின் முகம் மென்மையாக இருக்க 5 எளிய குறிப்புகள்

ஆண்களின் முகம் மென்மையாக இருக்க 5 எளிய குறிப்புகள்

Published on

பெண்கள் முகத்தை எப்படி கவனித்துக் கொள்கிறார்களோ, அதே போல ஆண்கள் முக அழகிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தினமும் முகத்தை சுத்தமாக வைத்திருப்பது பருக்கள் உருவாவதை தடுக்கிறது. சரியான ஊட்டச்சத்து முகத்தை பளபளபாக்கும். எனவே ஆண்கள் இந்த அழகு குரிப்புகளை கடைப்பிடித்தாலே போதும்.. முகம் பொழிவுப்பெறும்..

1. சரியான முக பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்தல்
ஆண்கள் தங்கள் முகத்திற்கு க்ளென்சர்கள், ஸ்க்ரப்பர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றில் ஆல்கஹால், சாயம், தீங்கு விளைவிக்கும் வாசனை திரவியங்கள் போன்றவை இல்லாத பொருட்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பொதுவாக நுரை கொண்டு ஷேவ் மற்றும் ஷேவிங் கிரீம் போட்டுவிட்டு அதன் பின்னர் ஷேவ் லோஷன்களில் வலுவான வாசனை இருக்கும்.அதனை கண்டிப்பாக போடக்கூடாது.. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். நுரை கொண்ட ஷேவிங் கிரீம் வெளிப்புற தோலை உலர வைக்கும். சுருக்கமாக, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும்.

2. ஆண்களுக்கான சிறப்பு
பெண்கள் பயன்படுத்தும் அதே கிரீம்கள், டோனர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் போன்றவற்றையே பெரும்பாலான ஆண்களும் சருமப் பராமரிப்புக்கு வாங்குகின்ரனர். இது சருமத்தை பாதிக்கலாம். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் அவர்களுக்கானவை. இது உங்கள் சருமத்திற்கு பொருந்தாமல் போகலாம். தோல் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே ஆண்களுக்கான பிரத்யேக சரும அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.

3. கிளைகோலிக் அமிலம்
நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்கும் ஆண்கள் இரவில் படுக்கும் முன்னும் காலையிலும் முகத்தை கழுவ வேண்டும். இது ஒரு நல்ல பழக்கமும் கூட. உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவுவதற்குப் பதிலாக கிளைகோலிக் அமிலத்தைப் பயன்படுத்தினால், ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவீர்கள். சருமத்தில் நேரடியாக கிளைகோலிக் அமிலத்தைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் கிளைகோலிக் அமிலம் உள்ள க்ளென்சரைப் பயன்படுத்தலாம்.

4. முகமும் உடலும் ஒரே மாதிரி
உடலின் மற்ற பகுதிகளை விட முகத்திற்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. பாடி லோஷனை முகத்தில் தடவினால் துளைகள் அடைத்துவிடும். எனவே கழுத்து வரை முகத்தில் ஃபேஸ் க்ரீம் அல்லது மாய்ஸ்சரைசர் தடவவும். உடலின் மற்ற பகுதிகளுக்கு பாடி லோஷனைப் பயன்படுத்துங்கள். எல்லாவற்றிற்கும் ஒரே கிரீம் பயன்படுத்தினால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.

5. வறட்சியைத் தவிர்க்கவும்
முகத்தை எவ்வளவு நன்றாகக் கழுவினாலும், நல்ல ஃபேஸ் க்ரீமை உபயோகித்தாலும், முகம் வறண்டு, கரடுமுரடாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், முகத்தில் தேவையான அளவு ஈரப்பதம் கிடைக்காததுதான். நீங்கள் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தும் முறை தவறாக இருக்கலாம். முகம் சற்று ஈரமாக இருக்கும்போது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறிது காலம் நீடிக்கும். உலர்ந்த முகத்தில் இதைப் பயன்படுத்தினால், அது முகத்தில் நீண்ட காலம் நீடிக்காது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உணவுகளை எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்? அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா?

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods...

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா நீங்கள்?

அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக...

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...