follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடும்

ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடும்

Published on

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் திகதி விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான தயான் லெனவ நேற்று (03) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த மனுவை சமர்ப்பிப்பதற்கு முன்னர் குறித்த நபர் தன்னிடமிருந்தோ அல்லது சட்டத்தரணிகளிடமிருந்தோ எந்தவொரு கருத்தையும் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...