இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ஹெலிக்கொப்டரில் 14 பேர் பயணித்தநிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் தீவர சிகிச்சை பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு 10 கிலோ மீற்றர் அதாவது 05 நிமிங்கள் இருக்கும்பொழுதே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.