பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம்!

580

பிரியந்த குமார தியவடனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை(10) விசேட கண்டன தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் 140 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தே கநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here