follow the truth

follow the truth

October, 7, 2024
Homeலைஃப்ஸ்டைல்உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 சந்தைக்கு

உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 சந்தைக்கு

Published on

ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர வன்பொருள் வெளியீட்டு விழாவில் கடந்த சில நாட்களாக உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 புதிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தியது.

இது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் தனது தயாரிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.

இந்த சமீபத்திய மாடல் குரல் மற்றும் படங்களைப் பயன்படுத்தி ChatGPT போன்று செயல்படுகிறது.

ஆனால் அவர்கள் தங்கள் புதிய தயாரிப்பு வரிசையில் Apple Intelligence என்ற புதிய மென்பொருளை சேர்த்துள்ளனர்.

AI ஆயுதப் போட்டியில் ஆப்பிளின் தொழில்நுட்பம் பின்தங்கவில்லை என்பதை முதலீட்டாளர்களை நம்ப வைப்பதற்காகவே இது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

iPhone 16 கைபேசிகள் போன்றே Apple Watch, புதிய AirPods வசதியுடன் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வந்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் விலை எவ்வளவு என்பதை அறியவும் விரும்புகிறார்கள்.

எனவே ஆப்பிளின் புதிய iPhone 16, $799 இலிருந்து விலை வரம்பு ஆரம்பமாகிறதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

iPhone 16 Plus , $899 இலிருந்து விலை வரம்பு ஆரம்பமாகிறது.

Monara

புதிய Apple iPhone 16 Pro விலை $999 மற்றும் iPhone 16 Pro Max விலை $1,199 ஆகும்.

புதிய AirPods 4 க்கு $129 ஆகும். அதே நேரத்தில் அதே வகையிலான Active noise cancellation feature AirPods 4 $179 ஆகும்.

Monara

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய Series 10 Watch$399 இலிருந்து விலைகள் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இவை அனைத்தும் முன்கூட்டிய ஆர்டர் செய்தால் செப்டம்பர் 20க்குப் பிறகு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Monara

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துப்பாக்கியை துடைக்கும் போது பிரபல பாலிவுட் நடிகர் மீது குண்டு பாய்ந்தது

கைத்துப்பாக்கியை துடைக்கும்போது தவறுதலாக வெடித்ததில் பிரபல நடிகர் கோவிந்தா காலில் குண்டு பாய்ந்தது. பாலிவுட்டில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் கோவிந்தா....

கிறிஸ் கிறிஸ்டோபர்சன் காலமானார்

பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான கிறிஸ் கிறிஸ்டோபர்சன் (Kris Kristofferson) கடந்த 28ஆம் திகதி உயிரிழந்ததாக...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...