Miss International – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி நேற்றிரவு (16) இலங்கை வந்தடைந்தார்.
இந்தப் போட்டி இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது.
கடந்த 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.
Miss International – 2024 பட்டத்தை வென்ற கண்டி, பிரிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த திலினி குமாரி, நடிகையாகவும் அறிவிப்பாளரும் பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.