எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு மதிப்பிடப்பட்ட தொகை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.