இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலை வீழ்ச்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.