follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Published on

இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று (03) பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த மூவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...

கம்பஹாவில் 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...