நேற்று மட்டும் 380, 463 பேருக்கு கொவிட் தடுப்பூசி

929

நாட்டில் நேற்றைய தினம் 380, 463 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 338, 914 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 இலட்சத்து 24 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 28, 054 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

13, 465 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டதாக, தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் 709, 468 பேருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் 30 பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் இதுவரையில், அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114, 105 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here