follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

Published on

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது.

பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

தங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே என்றும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் இந்திய மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை...