மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.
அதேநேரம், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாரவூர்தி, பேருந்து மற்றும் வேன் என்பன மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மெக்சிகோவில் கடந்த சில ஆண்டுகளில் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.