follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP114 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ' Sri Lanka Expo - 2026'

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

Published on

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 1992, 1994, 1997 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கை எக்ஸ்போ கண்காட்சியை நடாத்தியுள்ளது. பதின்னான்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2026 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026.06.18 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதிக்கு தயார்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 1,500 பேரைக் கவர்ந்திழுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UPDATE – கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...