follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP2காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் - பலி எண்ணிக்கை 58,000 ஐ கடந்தது

காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் – பலி எண்ணிக்கை 58,000 ஐ கடந்தது

Published on

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.

இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. கடந்த 21 மாதமாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58,000 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு இலட்சத்துக்குகும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகியது.

இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியதும் அவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். எனினும், பலர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, அப்படியே தரையில் சாய்ந்தனர். போர் நிறுத்தம் பற்றி விவாதித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

மீரிகமவில் துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி...

இலங்கை – ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு

இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...