கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப் பதிவு செய்தது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில், ASPI 297.13 புள்ளிகள் (1.60%) உயர்ந்து 18,838.39 புள்ளிகளாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இந்த உயர்வுக்கு 132 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.