கம்போடியாவின் 2026ஆம் ஆண்டிலிருந்து கட்டாய ராணுவச் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஹுன் மானெட் அறிவித்தார்.
கம்போடியாவில் கட்டாய இராணுவச் சேவை சட்டம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
18க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அனைத்து கம்போடியர்களும் 18 மாத இராணுவச் சேவை புரிய வேண்டும் என்று கம்போடிய நாடாளுமன்றம் 2006ஆம் ஆண்டில் அறிவித்தது.
ஆனால், இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அண்டை நாடான தாய்லாந்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டாய ராணுவச் சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.