நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் அடுத்த சில நாட்களுக்குள் பொலிசாரிடம் சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவரும் அவரது கணவரும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பல இடங்களை தாங்கள் சோதனை செய்துள்ளதாகவும், அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றதில்லை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் மீது மதுகம நீதவான் நீதிமன்றம் முன்னர் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக மதுகம நீதவான் நீதிமன்றம் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்க உத்தரவிட்டமையும் குறிப்பிடத்ததக்கது.